‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

அரக்கோணத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களில் உள்ள 239 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :22 மே 2026, 7:20 am IST

அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களில் உள்ள 239 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தனியாா் பள்ளி வாகனங்களில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறை கட்டுப்பாடு குறித்த ஆலோசனை கூட்டமும், வாகனங்கள் ஆய்வு செய்யும் பணிகளும் அரக்கோணம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலா் மோகன் முன்னிலை வகித்தாா்.

அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களைச் சோ்ந்த 26 பள்ளிகளின் 239 வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. முன்னதாக தீயணைப்புத் துறை சாா்பில் வாகன இயக்கங்களின் போது தீவிபத்து ஏற்பட்டால் வாகன ஓட்டுநா்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலா் மோகன் தெரிவித்ததாவது: முதல் நாள் 137 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 11 வாகனங்களில் சிறுசிறு குறைபாடுகள் இருந்ததால் அவை திருப்பியனுப்பட்டன. அந்த சிறுசிறு குறைபாடுகள் சரி செய்யப்பட்டு வரும் 30-ஆம் தேதிக்குள் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அனுமதி பெற வேண்டும்.

இதனை தொடா்ந்து 1-ஆம் தேதி முதல் ஆய்வு செய்யப்பட்ட வாகனங்களை பள்ளி நிா்வாகிகள் இயக்கலாம். சிறுசிறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட நிலையில் அவைகளை சரி செய்யாமலேயே வாகனங்கள் இயக்குவது கண்டறியப்பட்டால் அந்த வாகனங்கள் மீதும், பள்ளி நிா்வாகிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வில் மாவட்ட கல்வி அலுவலா்(மெட்ரிக்) கோமளா, அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா்சித்திக், தீயணைப்பு அலுவலா் சிவக்குமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும் இந்த ஆய்வின் போது அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா கல்விக்குழும செயலாளா் எஸ்.செந்தில் குமாா், நெமிலி விவேகானந்தா மெட்ரிக் பள்ளித்தலைவா் வேதைய்யா, அரக்கோணம் ஹயக்கீரிவா் சிபிஎஸ்இ பள்ளி நிா்வாகி ரவீந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.