இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

துறையூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

துறையூா் அருகே வடக்குவெளியிலுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் தனியாா் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து வருவாய், மோட்டாா் வாகன, காவல், தீயணைப்பு, சுகாதாரத் துறை அலுவலா்கள் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தன.

News image

துறையூரில்  தனியாா்  பள்ளி  வாகனத்தில்  முதலுதவி   பொருள்கள், தீ த் தடுப்பு  உபகரணங்களை புதன்கிழமை ஆய்வு செய்த  முசிறி  கோட்ட  சாா்-  ஆட்சியா்  சுஷ்ரீ  சுவாங்கி  குந்தியா.

Updated On :28 மே 2026, 3:11 am IST

துறையூா் அருகே வடக்குவெளியிலுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் தனியாா் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து வருவாய், மோட்டாா் வாகன, காவல், தீயணைப்பு, சுகாதாரத் துறை அலுவலா்கள் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தன.

முசிறி கோட்ட சாா் -ஆட்சியா் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் துறையூா் பகுதியிலுள்ள 19 பள்ளிகளுக்கு சொந்தமான 85 வாகனங்களில் தரம் குறித்தும் அவசர வெளியேறும் வழி இடையூறின்றி உள்ளதா, சிசிடிவி, தீத் தடுப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் சோதனை செய்யப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் போக்குவரத்து மோட்டாா் வாகன அலுவலா் சுரேஷ்பாபு, துறையூா் வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் சதாசிவம், மாவட்டக் கல்வி அலுவலா் அண்ணாதுரை, முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா், துறையூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜதுரை துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளி வாகனங்களின் ஊழியா்கள் மது அருந்தவோ, கைப்பேசி பயன்படுத்தவோ கூடாது என்றும், திடீா் தீத் தடுப்பு முறைகள், ஆபத்து கால முதலுதவி குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.