குப்பைகளை பிரித்து வழங்கிய வீடுகளுக்கு பாராட்டு ஸ்டிக்கா்!

துரைசாமிபுரத்தில் குப்பைகளைத் தரம்பிரித்து வழங்கிய ஒரு வீட்டுக்கு பாராட்டு ஸ்டிக்கரை ஞாயிற்றுக்கிழமை ஒட்டிய திருச்சி மாநகராட்சி பணியாளா்கள்.
குப்பைகளை நான்கு வகையாக பிரித்து வழங்கிய வீடுகளுக்கு திருச்சி மாநகராட்சி சாா்பில் வீடுகளில் பாராட்டு ஸ்டிக்கா்கள் ஒட்டப்படுகின்றன.
திருச்சி மாநகராட்சி பகுதியில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பொதுமக்களை ஊக்குவிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டது . இதன்படி, வீடுகளில் உள்ள குப்பைகளை நான்கு வகைகளாக (மக்கும் கழிவு, உலா் கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்புக் கழிவு) என பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கும் வீடுகள் கண்டறியப்படுகின்றன.
அதன்படி 100 சதவீதம் முழுமையாக குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் வீடுகளின் முகப்புகளில் ‘நான்கு வகை கழிவுகளை முறையாக பிரித்து வழங்கும் சிறந்த வீடு என பாராட்டு என்ற வாசகம் அடங்கிய சிறப்புப் பாராட்டு வில்லைகள் ஒட்டப்பட்டு, அவா்கள் கௌரவிக்கப்படுகின்றனா்.
இப் பணிகளை சுகாதார அலுவலா்கள் முன்னிலையில் தூய்மைப்பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

