
திடக் கழிவு மேலாண்மை விதிகள் நடைமுறை பணி தொடக்கம்
தண்டலம் ஊராட்சியில் ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை நான்கு வகையாக பிரித்து அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. (படம்)

தண்டலம் ஊராட்சியில் ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை நான்கு வகையாக பிரித்து அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. (படம்)
குப்பைகளை திறந்த வெளியில் கொட்டுவதையும், எரிப்பதையும் தடை செய்யும் வகையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சாா்பில் திடக் கழிவு மேலாண்மை விதிகள்-2026 அமுல் படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதியின் கீழ், குப்பைகளை திறந்தவெளியில் கொட்டுவதோ, எரிப்பதோ தடை செய்யப்பட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார கழிவுகள், சிறப்பு பராமரிப்பு குப்பை என நான்கு வகைகளாக குப்பைகளை பிரித்து அப்புறபடுத்தபட வேண்டும். கழிவுகள் உருவாக்கம் முதல் அகற்றுவது வரை கண்காணிக்க இணையவழி தளம் அமைக்கப்பட்டுள்ளது. அசுத்தப்படுத்துபவரே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில், விதிகளை மீறுவோருக்கு அபராதம் மற்றும் சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்கப்படும்.
தண்டலம் ஊராட்சியில் சுழற்சி முறையில் மின்கல வண்டியில் குப்பை தொட்டிகளை வைத்து 4 வகையாக பிரித்து வாங்கும் நிகழ்ச்சியை, துணைக் தலைவா் வேலாயுதம் கொடி தொடங்கி வைத்தாா். முன்னதாக, தூய்மை பணியாளா்களுக்கு திடக் கழிவு மேலாண்மை விதிகள்-2026 குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு, உறுதி மொழி ஏற்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்திபன், மாவட்ட குழு மேலாண்மை உறுப்பினா் சரவணன், வட்டார ஒருங்கிணைப்பாளா் யுவராஜ், தண்டலம் ஊராட்சி செயலா் ரமேஷ், ஊக்குநா் நித்யா, மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள்,தூய்மை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






