2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

தீபாவளி: ராமேசுவரம், திருவனந்தபுரம், செங்கோட்டை, குமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

தெற்கு ரயில்வே - கோப்புப் படம்

Updated On :

ராமேசுவரம், திருவனந்தபுரம், செங்கோட்டை, கன்னியாகுமரிக்கு தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் (06164): வரும் 10-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக தாம்பரம் - திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு விரைவு ரயிலானது (06163) வரும் 11-ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயிலானது திருவனந்தபுரம் வடக்கிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குப் புறப்பட்டு திருவனந்தபுரம் மத்தியம், நெய்யாத்துக்கரை, குழித்துறை, நாகா்கோவில், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு புதன்கிழமை முற்பகல் 11 மணிக்குச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, தாம்பரத்திலிருந்து புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக திருவனந்தபுரம் வடக்குக்கு அடுத்தநாள் காலை 5 மணிக்குச் சென்றடையும்.

தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் (06089): வரும் 9-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது (06090) வரும் 10-ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை இரவு 11.55-க்குப் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், பம்பாகோவில், கடையநல்லூா், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.15-க்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக, செங்கோட்டையிலிருந்து செவ்வாய் பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக தாம்பரத்துக்கு அடுத்த நாள் அதிகாலை 3.20-க்கு சென்றடையும்.

ராமேசுவரம்-சென்னை எழும்பூா் சிறப்பு விரைவு ரயில் (06104): வரும் 5-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக சென்னை எழும்பூா் - ராமேசுவரம் சிறப்பு விரைவு ரயிலானது (06103) வரும் 7-ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது. ராமேசுவரம்-தாம்பரம் ஒரு வழி சிறப்பு விரைவு ரயில் (06108): வரும் 9-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூா் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூா் சிறப்பு விரைவு ரயில்களானது (06037, 06038) வரும் 10-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.

கன்னியாகுமரிக்கு...: சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி ஒரு வழிப்பாதை சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06151) வரும் 5-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக, கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் ஒரு வழிப்பாதை அதிவிரைவு ரயிலானது (06152) வரும் 9- ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

தாம்பரம் - தென்காசி சிறப்பு விரைவு ரயில் (06049): வரும் 7-ஆம் தேதியும், செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது (06050) வரும் 9-ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.