ஆயுத பூஜை: செங்கோட்டை, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள்
ஆயுத பூஜை கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம், ஈரோடு - திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
ரயில் - பிரதிப் படம்
ஆயுத பூஜை கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம், ஈரோடு - திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு விரைவு ரயிலானது (06089) வரும் 19 ஆம் தேதியும், செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது (06090) வரும் 20 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளன.
8 படுக்கை பெட்டிகள், 11 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிப் பெட்டிகள் என மொத்தம் 21 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.15 க்கு சென்றடையும். மறுமாா்க்கமாக, செங்கோட்டையிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக தாம்பரத்துக்கு அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்குச் சென்றடையும்.
இதேபோல, ஈரோடு - திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயிலானது (06145) வரும் 16 ஆம் தேதியும், திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது (06146) வரும் 20 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளன.
இதன்படி, ஈரோட்டிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குப் புறப்படும் ரயிலானது சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா், சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலிக்கு சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, திருநெல்வேலியிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 11.40 மணிக்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக தாம்பரத்துக்கு புதன்கிழமை காலை 10.30 மணிக்கு சென்றடையும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

