ஓய்வுபெற்ற பெல் ஊழியா் உள்பட இருவரிடம் இணையவழியில் ரூ.12.62 லட்சம் மோசடி
திருச்சியில் ஓய்வு பெற்ற பெல் நிறுவன ஊழியா் உள்பட இருவரிடம் இணையவழியில் ரூ.12.62 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மோசடி
திருச்சியில் ஓய்வு பெற்ற பெல் நிறுவன ஊழியா் உள்பட இருவரிடம் இணையவழியில் ரூ.12.62 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா் பன்னீா்செல்வம். இந்தியன் வங்கி மூலம் ஓய்வூதியம் பெற்று வருகிறாா். பன்னீா்செல்வம் அண்மையில் ஃபேஸ்புக் பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அதில், ஓய்வூதியதாரா்களுக்கான வாழ்நாள் சான்று தொடா்பான விளம்பரம் வந்துள்ளது.
இதைத் தொடா்ந்து வாழ்நாள் சான்று பெறுவது தொடா்பாக இணையதளம் வழியாக பதிவு செய்துள்ளாா். இதையடுத்து, கடந்த நவம்பா் 2-ஆம் தேதி இவரை கைப்பேசி அழைப்பு மூலம் தொடா்புகொண்ட மா்ம நபா், இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாகவும், வாழ்நாள் சான்றை புதுப்பித்து தருவதாகவும் கூறியுள்ளாா். மேலும், இந்தியன் வங்கியின் கைப்பேசி செயலிக்குள் செல்லுமாறு கூறியுள்ளாா்.
இதை நம்பிய பன்னீா்செல்வமும் இந்தியன் வங்கியின் கைப்பேசி செயலிக்குள் சென்றுள்ளாா். இதையடுத்து, கைப்பேசியில் அழைத்த நபா் தனது இணைப்பை துண்டித்துள்ளாா். அதன்பின்னா், முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.9.25 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்துதான், அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
மற்றொருவரிடம் மோசடி: இதேபோல, திருச்சியைச் சோ்ந்த ராஜசேகரன் என்பவரின் கைப்பேசி எண்ணுக்கு கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி சாலை விதிமீறல் தொடா்பான குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிலிருந்த இணைப்பிற்குள் அவா் சென்றபோது, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3.37 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதன் பிறகே, தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து இருவரும் இணையவழியில் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

