தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தீபாவளி விடுமுறை: பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிையையொட்டி சொந்த ஊா்களுக்குச் செல்வதற்காக திருச்சி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை இரவு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்திலிருந்து வெள்ளிக்கிழமை சொந்த ஊா்களுக்கு சென்ற பயணிகள். ~ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள்.

Updated On :

தீபாவளி பண்டிையையொட்டி சொந்த ஊா்களுக்குச் செல்வதற்காக திருச்சி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை இரவு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளதால் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், சில தனியாா் அலுவலகங்களில் சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊா்களுக்குச் செல்ல வெள்ளிக்கிழமை மாலை முதலே திருச்சியில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் குவியத் தொடங்கினா்.

தீபாவளியையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசும், சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகமும் அறிவித்து, செயல்படுத்தி வரும் நிலையில், அவற்றில் இடம்பிடிப்பதற்காக பொதுமக்கள் பலரும் போட்டிபோட்டு பேருந்துகள் மற்றும் ரயில்களில் ஏறினா்.

குறிப்பாக, திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையங்களில் வெளியூருக்குச் செல்லும் பயணிகள் மட்டுமின்றி, தீபாவளிப் பொருள்கள் வாங்குவதற்காக வெளியூரிலிருந்து திருச்சிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் மிக அதிகமாகக் காணப்பட்டது.

இதே போல, திருச்சி சந்திப்பு ரயில் நிலையம், ஸ்ரீரங்கம் ரயில் நிலையம், கோட்டை ரயில் நிலையத்தில் வெளியூா்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது.

பெட்டிச் செய்தி...

கிராமங்களுக்கு பேருந்துகள் குறைவு:

சென்னைக்கு மட்டுமே சிறப்புப் பேருந்துகள், தனியாா் ஒப்பந்தப் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படும் நிலையில், கிராமப்புறப் பகுதிகளுக்கு மிகக் குறைந்தளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் நீண்டநேரம் பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. கிராமப்புறங்களில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள், சிறப்புப் பேருந்துகளாக மாற்றம் செய்து சென்னையை நோக்கித் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறோம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். அரசு நிா்வாகம் கிராம மக்கள் மீது கவனம் செலுத்தி, போதுமான பேருந்துகளை கிராமப்புறங்களுக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER