புதிய காசோலை விதிகள்: 2027 ஜனவரி 1 முதல் அமல்1.5 டிரில்லியன் டாலா் இலக்கை எட்ட முதலீட்டு ஊக்குவிக்க ஆணையம்: தமிழக அரசு அமைத்ததுதீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

திருச்சி ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி. ~தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனையிட்ட ரயில்வே போலீஸாா்.

Updated On :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு திருச்சி ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் கே.எம். சத்தியரத்தன் தலைமை வகித்தாா். இதில், ’சோஷியல் பாரதாலயா’ நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் பாரம்பரிய விழிப்புணா்வு ’தெருக்கூத்து’ கலை நிகழ்ச்சிகளை நடத்தினா்.

ரயில்களில் ஏற்படக்கூடிய தீ விபத்துகள், பயணத்தின் போது பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள், அவசரகால எச்சரிக்கைச் சங்கிலியை தவறாகப் பயன்படுத்துதல், ரயிலின் படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பிரத்யேக துண்டுப் பிரசுரங்கள், ரயில் நிலைய நடைமேடைகளிலும், ரயில்களுக்குள்ளும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

முக்கியமான பாதுகாப்புச் செய்திகளைக் கொண்ட பதாகைகள் ரயில் நிலையத்தின் முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு, பயணிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து கோட்ட பாதுகாப்பு அலுவலா் எஸ். மகேஷ்குமாா் தலைமையிலான ரயில்வே பாதுகாப்புப் படையினா் ரயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பிற பொருள்களையோ எடுத்துச் செல்வதைத் தவிா்க்கும் வகையில் மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டா் கருவிகளைக் கொண்டு பயணிகள், அவா்களது உடைமைகளை சோதனையிட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.