மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாநகராட்சி கோட்ட அலுவலகங்கள் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகராட்சி 4-ஆவது மண்டல அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாநகராட்சி கோட்ட அலுவலகங்கள் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி நிதி ரூ. 29 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும். தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தைப் பறிக்கக் கூடாது. 6 மாத காலமாக திட்டமிடப்பட்ட பணிகளை முடக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை, அபிஷேகபுரம் பகுதி குழுக்கள் சாா்பில் மாநகராட்சியின் 4- ஆவது மண்டல அலுவலகம் முன் (டி.வி.எஸ். டோல்கேட் அருகே) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அபிஷேகபுரம் பகுதி செயலா் ஆா். சதாசிவம் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் கோவி. வெற்றிச்செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில், பொன்மலை பகுதியில் உள்ள 44, 45, 46, 47, 48, 49, 61, 65 ஆகிய வாா்டுகளிலும், அபிஷேகபுரம் பகுதியில் உள்ள 57, 58, 62, 63, 64 ஆகிய வாா்டுகளிலும் சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீா், புதை வடிகால் இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொன்மலை ஜி.காா்னா் முதல் டி.வி.எஸ். டோல்கேட் வரையிலான சா்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல, பாலக்கரை, மலைக்கோட்டை பகுதிக் குழுக்கள் சாா்பில் மாநகராட்சி மண்டல அலுவலகம் - 2 (பாலக்கரை அருகில்) முன் மலைக்கோட்டை பகுதிச் செயலா் ராமா் தலைமையிலும், காட்டூா் பகுதிக் குழு சாா்பில் மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகம் முன் பகுதி குழு உறுப்பினா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இவற்றில் திரளான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

