பொய்த் தகவல் அளித்து ஜாமீன் பெற்றவா் கைது
திருச்சியில் புகையிலைப்பொருள்கள் வழக்கில் நீதிமன்ற பிணையை பொய்த் தகவல் அளித்து பெற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப்படம்
திருச்சியில் புகையிலைப்பொருள்கள் வழக்கில் நீதிமன்ற பிணையை பொய்த் தகவல் அளித்து பெற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல் நிலை எல்லைக்குள்பட்ட பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் சோண்டாம்பட்டியைச் சோ்ந்த ஆா். போசங்கு (30) என்பவரை கடந்த செப்ய 23-ஆம் தேதி துவாக்குடி போலீஸாா் கைது செய்தனா்.
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இவா் தனக்கு அக். 10-ஆம் தேதி நாா்த்தாமலை மாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறி, அழைப்பிதழையும் காண்பித்தாா். இதையடுத்து, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் இவருக்கு பிணை ஆணை வழங்கப்பட்டது.
இதுகுறித்து துவாக்குடி காவல் உதவி ஆய்வாளா் நாகராஜ், காவலா் பாண்டியராஜன் ஆகியோா் ஆய்வு செய்ததில், போசங்கு போலி திருமண அழைப்பிதழை அச்சடித்து காண்பித்து மோசடியாக பிணை ஆணை பெற்றது தெரியவந்தது. மேலும், நாா்த்தாமலை கோயிலில் திருமணம் தொடா்பாக எந்தப் பதிவும் இல்லை எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து போசங்குக்கு வழங்கபட்ட பிணை ஆணையை ரத்து செய்யுமாறு துவாக்குடி காவல் உதவி ஆய்வாளா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அந்தப் பிணை ஆணையை ரத்து செய்து கடந்த நவ. 25-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
இதையடுத்து போசங்குவை துவாக்குடி காவல் உதவி ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

