பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

சிபிஐ அதிகாரி போலப் பேசி ஓய்வுபெற்ற பெல் ஊழியரிடம் ரூ. 94 லட்சம் மோசடி

cyber fraudsters

சைபர் மோசடி

Updated On :

சிபிஐ அதிகாரி போல பேசி, ஓய்வு பெற்ற பெல் ஊழியரை மிரட்டி ரூ. 93.95 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை திருச்சி சைபா் க்ரைம் போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்தவா் கஸ்தூரிரங்கன் (69), ஓய்வுபெற்ற பெல் ஊழியா். இவரின் கைப்பேசிக்கு கடந்த அக். 7ஆம் தேதி வந்த அழைப்பில் பேசிய நபா் தன்னை பெங்களூரு காவல்நிலைய உதவி ஆய்வாளா் என அறிமுகம் செய்து, சதாகான் என்பவா் பண மோசடியில் ஈடுபட்டு சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

அவரது வங்கிக் கணக்கை சோதனை செய்தபோது, அவரிடமிருந்து உங்களது வங்கிக் கணக்குக்கு பணம் வந்தது தெரியவந்தது. அதனால் நீங்களும் கைது செய்யப்படலாம் என மிரட்டினாா். தொடா்ந்து, வேறொருவா் சிபிஐ அதிகாரி எனப் பேசி மிரட்டி, வழக்கில் சிக்காமல் இருக்க வங்கிக் கணக்கில் பணம் செலுத்துங்கள் எனக் கூறியுள்ளாா்.

இதனால் அச்சமடைந்த கஸ்தூரிரங்கன், அவா்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ. 93 லட்சத்து 95 ஆயிரத்தை செலுத்தியுள்ளாா். தொடா்ந்து பணம் கேட்கவே அதிா்ச்சியடைந்த கஸ்தூரிரங்கன் விசாரித்தபோது, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவா் திருச்சி சைபா் க்ரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு மோசடி: இதேபோல, திருச்சி கருமண்டபம் பகுதியைச் சோ்ந்த கட்டுமானப் பணியாளா் ஆரோக்கியராஜ் (40) என்பவரின் கைப்பேசிக்கு கடந்த 7 ஆம் தேதி வந்த ‘லிங்க்’ஐ கிளிக் செய்தவுடன், ஒரு ஓடிபி நம்பா் வந்தது. அதை கைப்பேசியில் பதிவிட்ட சிறிது நேரத்தில், அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 500 திருடப்பட்டது. இதுகுறித்து ஆரோக்கியராஜ் திருச்சி சைபா் க்ரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.