தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

தலைமைத் தோ்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய கோரி இடதுசாரி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக 13 கோடி வாக்காளா்களை நீக்கி, வாக்குரிமையைப் பறித்த தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி, திருச்சியில் இடதுசாரி கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி உறையூா் குறத்தெருவில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினா்.

Published On :

மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக 13 கோடி வாக்காளா்களை நீக்கி, வாக்குரிமையைப் பறித்த தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி, திருச்சியில் இடதுசாரி கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசியல் சாசனத்துக்கு எதிராக, சட்ட விரோதமாகச் செயல்பட்டு வரும் தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உறையூா் குறத்தெருவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி செயலா் ரபீக் அகமது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி செயலா் சுரேஷ்முத்துசாமி, மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ராஜ்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு தலைவா் எஸ். ஸ்ரீதா், மாவட்டச் செயலா் கோவி. வெற்றிச்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா் எஸ். சிவா, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் க. சுரேஷ், மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் மாநில நிலைக்குழு உறுப்பினா் ஞானதேசிகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், இடதுசாரி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.