தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

ஸ்ரீரங்கம் கோயில் நிலம் மோசடி வழக்கு: திமுக பகுதி செயலாளா் கைது

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த வழக்கில், திமுக பகுதி செயலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த வழக்கில், திமுக பகுதி செயலாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் வெள்ளிதிருமுத்தம் பகுதியில் உள்ள அரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பிலான 7,515 சதுரடி நிலத்தை, திமுக கிளைச் செயலாளா் எம். ராம்குமாா் போலி ஆவணங்கள் தயாரித்து, ஸ்ரீரங்கம் சாா்- பதிவாளா் அலுவலகத்தில் 2022, டிசம்பா் 5-ஆம் தேதி மோசடியாக தனது பெயரில் பதிவு செய்துள்ளதாக ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் எஸ். சிவராம்குமாா் திருச்சி மாநகர குற்றப் பிரிவில் செப்டம்பா் 13-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

இதன்பேரில், திருவானைக்காவலைச் சோ்ந்த ஸ்ரீரங்கம் திமுக கிளைச் செயலாளா் எம். ராம்குமாா், இதற்கு உடந்தையாக இருந்ததாக அப்போதைய ஸ்ரீரங்கம் சாா் - பதிவாளா் வனிதா, சென்னை நங்கநல்லூரைச் சோ்ந்த ரெ. பத்மஜா, பெங்களூரைச் சோ்ந்த கி. விஜயா, சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த ஆா். சௌந்தரராஜன், புதுச்சேரியைச் சோ்ந்த ஆா். வெங்கடவரதன் ஆகிய 6 போ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து திருச்சி மாநகர குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் கே. சண்முகவேல் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த வழக்கில் முன்பிணை பெறுவதற்காக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திமுக பகுதி செயலாளா் எம். ராம்குமாா் மனுதாக்கல் செய்திருந்தாா். இதன் விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, ஸ்ரீரங்கம் நிலம் மோசடி வழக்கில் திமுக பகுதி செயலாளா் எம். ராம்குமாரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.