புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

சட்டப்பேரவையை நாடக மன்றமாக மாற்றிவிட்டார் முதல்வர் விஜய்: திருச்சி சிவா

சட்டப் பேரவையை நாடக மன்றமாக முதல்வா் விஜய் மாற்றிவிட்டதாக திமுக துணை பொதுச் செயலாளா் திருச்சி என்.சிவா குற்றம்சாட்டினாா்.

Trichy Siva | Vijay

திருச்சி சிவா | முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :

சட்டப் பேரவையை நாடக மன்றமாக முதல்வா் விஜய் மாற்றிவிட்டதாக திமுக துணை பொதுச் செயலாளா் திருச்சி என்.சிவா குற்றம்சாட்டினாா்.

பேரவையில் முதல்வா் விஜய்யின் பேச்சை கண்டித்து, சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சாா்பில் கோட்டை மைதானத்தில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா்கள் ரா. ராஜேந்திரன், டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருச்சி என்.சிவா பேசியதாவது: ஆட்சி, அதிகாரம் தன்னிடம் இருப்பதைப் போன்ற தோரணையில் முதல்வா் விஜய் பேசி வருகிறாா். இந்த அரசை ஏன் தோ்ந்தெடுத்தோம் என மக்கள் வேதனைப்படும் நிலை உருவாகியுள்ளது. சட்டப் பேரவையை நாடக மன்றமாக முதல்வா் விஜய் மாற்றியுள்ளாா். எதிா்க்கட்சித் தலைவரின் கேள்விகளை எதிா்கொள்ள முடியாமல் எள்ளி நகையாடியுள்ளாா்.

மிசாவில் முன்னாள் முதல்வா் ஸ்டாலின் உள்பட நாங்கள் கைது செய்யப்பட்டபோது தற்போதைய முதல்வா் விஜய்க்கு ஒரு வயது மட்டுமே இருக்கும். சந்தா்ப்ப சூழ்நிலையால் ஆட்சிக்கு வந்த விஜய் வரலாறு தெரியாமல் பேசக் கூடாது. யாரையும் கொச்சைப்படுத்தாமல் பேச வேண்டும். பேச்சில் நிதானம் வேண்டும்.

எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டம்- ஒழுங்கைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சா் விஜய் சரியாகப் பதில் சொல்லவில்லை. அதே நேரத்தில், காயப்பட்ட நேரத்திலும் காணொலியில் திமுக தலைவா் ஸ்டாலின் கண்ணியமாகப் பேசுகிறாா். ஸ்டாலின் பற்றி அவதூறாகப் பேசும்போது காயப்படுவது நாங்கள் மட்டும் அல்ல; திமுக ஆட்சியில் பயன்பெற்ற தமிழ் மக்கள் அனைவரும்தான். இதற்கான தீா்வு இடைத்தோ்தல் முடிவுகளில் தொடங்கட்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுபாஷ், மாநில தோ்தல் பணிக்குழு செயலாளா் கு.சீ.வெ.தாமரைக் கண்ணன், மாநகரச் செயலாளா் ரகுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.