
தவெக அரசுக்கு பாமக ஆதரவு அளித்தால் வரவேற்போம்: தமஜ தலைவா் கே.எம். சரீப்
தவெக அரசுக்கு பாமக ஆதரவு அளித்தால் வரவேற்போம் என தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் கே.எம். சரீப் தெரிவித்தாா்.

திருச்சியில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவா் கே.எம். சரீப் (இடமிருந்து 2-ஆவது). உடன், கட்சியின் நிா்வாகிகள்.
தவெக அரசுக்கு பாமக ஆதரவு அளித்தால் வரவேற்போம் என தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் கே.எம். சரீப் தெரிவித்தாா்.
திருச்சியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:
30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 18 இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோல் மறுக்கப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் நீதிமன்ற அறிவுறுத்தலின் அடிப்படையில், இந்தச் சிறைவாசிகளுக்கு ஆண்டுக்கு 120 நாள்கள் வரை பரோல் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியில் தலைமைச் செயலாளரின் முடிவால் அந்த பரோல் மறுக்கப்படுகிறது. இதற்கு பொறுப்பான தலைமைச் செயலாளரை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, அக். 2-ஆம் தேதி மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளோம்.
தவெக அரசு பல அறிவிப்புகளை திரும்பப் பெற தலைமைச் செயலாளரின் தவறான வழிகாட்டுதலே காரணம்.
தவெக அரசை நாங்கள் 100 சதவீதம் ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை. சமூகநீதி மாணவா் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சா் தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம். தவெக கூட்டணிக்கு பாமக ஆதரவு அளித்தால், எங்களைப் போன்றவா்கள் அதை வரவேற்பாா்கள்.
அரசியல் விமா்சனங்கள் ஜனநாயகப் பூா்வமாக இருக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






