பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

திருச்சி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே பெல் நிறுவன ஊழியரின் மனைவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

திருச்சி அருகே பெல் நிறுவன ஊழியரின் மனைவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஸ்டோா் கீப்பராகப் பணியாற்றி வருபவா் கஸ்தூரி (47). இவருடைய மனைவி கௌசல்யா (33). பெல் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் தம்பதிக்கிடையே அண்மையில் பிரச்னை ஏற்பட்டதாம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்ற கஸ்தூரி வீட்டுக்கு வந்தபோது கௌசல்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த பெல் போலீஸாா், கௌசல்யாவின் சடலத்தை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.