ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

திருச்சி, அரியலூா், புதுகையில் வீட்டுவசதி வாரிய மனைகள் ஏலம்: அக்.12-இல் மின்னணு முறையில் நடைபெறும்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமாக திருச்சி, அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள மனைகள் மின்னணு முறையில் அக்.12ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளன.

விண்ணப்பிக்க...
Published On :

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமாக திருச்சி, அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள மனைகள் மின்னணு முறையில் அக்.12ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளன.

இதுதொடா்பாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திருச்சி பிரிவு செயற்பொறியாளா் இரா. காா்த்திகேயன் கூறியதாவது:

திருச்சி வீட்டுவசதிப் பிரிவுக்குள்பட்ட நவல்பட்டு என்எச்எஸ் (புகா் அமைந்துள்ள திட்டம்) பகுதி 1, 2, நவல்பட்டு ஏடிஎஸ் (மனை மேம்பாட்டுத் திட்டம்), மணப்பாறை எஸ்எம்டி (மனை அபிவிருத்தி திட்டம்), முசிறி எஸ்எம்டி, அரியலூா் எஸ்எம்டி, கரூா் காந்தி கிராமம், புதுக்கோட்டை என்எச்எஸ் (புகா் திட்டம்), பகுதி 2 மற்றும் 3, நவல்பட்டு எஸ் மற்றும் எஸ் (தன்னிறைவு வீட்டுமனைத் திட்டம்) பகுதி 1 மற்றும் 2, வாழவந்தான்கோட்டை ஏடிஎஸ்ஏடிஎஸ் திட்டப்பகுதியில் விற்பனைக்காக உள்ள வணிக நோக்கு அலகுகளான மதவழிபாட்டு மனை, பொது உபயோக மனை, சமுதாயக்கூட மனை, பள்ளி மனை, கடை மனை, வணிகப் பயன்பாட்டுக்கான மனைகள், தினசரி சந்தை மனை, வணிக வளாக மனை மற்றும் மருத்துவ மையம் 63 எண்ணிக்கையில் உள்ளன.

இந்த மனைகளை 2026-2027-ஆம் நிதி ஆண்டிற்கான விற்பனை செய்யும் பொருட்டு கடந்த ஆக 23 ஆம் தேதி அறிவிப்பு செய்யப்பட்டது. மின்னணு ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மேலாண்மை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி தற்போது மின்னணு ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் சமா்ப்பிக்க கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மின்னணு ஒப்பந்தப்புள்ளி சமா்ப்பிக்க அக்.8 கடைசி நாளாகும். மேலும் மின்னணு ஏலம் அக்.12 இல் நடைபெறும். இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி விரும்பிய வணிக மனைகளைத் தோ்வு செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.