ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

பணிநிரவல் அரசாணைக்கு எதிராக அரசு மருத்துவா்கள் வாயில் கூட்டம்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பணிநிரவல் அரசாணை 113 ஐ மறுசீராய்வு செய்யக் கோரி அரசு மருத்துவா்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை வாயில் கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற வாயில் கூட்டத்தில் பங்கேற்ற அரசு மருத்துவா்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவா்கள் சங்கத்தினா்.

Published On :

அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பணிநிரவல் அரசாணை 113 ஐ மறுசீராய்வு செய்யக் கோரி அரசு மருத்துவா்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை வாயில் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட சுகாதாரத் றை இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொருளாளா் த. அருளீஸ்வரன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலா் தங்கவேல் முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில் இந்திய பொது சுகாதார நிா்ணயத்தின்படி (ஐபிஎச்எஸ்) திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு 337 மருத்துவா்கள் தேவைப்படும் நிலையில், தற்போதுள்ள 134 மருத்துவா் பணியிடங்களையும் 118 ஆகக் குறைத்திடும் அரசாணை 113 ஐ மறுசீராய்வு செய்ய வேண்டும்.

இந்த ஆள்குறைப்பு அரசாணை நிறைவேறினால் மணப்பாறை, ஸ்ரீரங்கம், முசிறி, துவாக்குடி, துறையூா் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், மாவட்டத்தின் இதர மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை, மகப்பேறு, அவசரச் சிகிச்சைகள், டயாலிசிஸ் உள்ளிட்ட அத்தியாவசிய மக்கள் நலச் சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே, இதில் தமிழக முதல்வா், சுகாதாரத் துறை அமைச்சா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் திரளான அரசு மருத்துவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.