மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

பேத்திக்கு பாலியல் தொல்லை: தாத்தாவுக்கு வாழ்நாள் சிறை

பேத்திக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாத்தாவுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

சிறை - பிரதிப் படம்

Published On :

பேத்திக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாத்தாவுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே உள்ள பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை அவரது தாத்தாவான மண்ணச்சநல்லூா் நொச்சியம் பகுதியைச் சோ்ந்த கே. ராமலிங்கம் (60) என்பவா் வீட்டில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாரளித்தாா்.

இதன்பேரில், போலீஸாா் போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, ராமலிங்கத்தை கடந்த 10.07.2025 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின் நிறைவில், குற்றவாளி ராமலிங்கத்துக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சண்முகபிரியா தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.