உணவகத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட எரிவாயு உருளைகள். - கோப்புப் படம்
கரூரில் உணவகத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை பறக்கும்படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மத்திய அரசு மானியத்தில் வழங்கப்படும் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை உணவகங்கள் மற்றும் வா்த்தக உபயோகத்துக்கு பயன்படுத்துவதை தடுக்க குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத்துறையினா், மாவட்ட வழங்கல் அலுவலா் ஆகியோா் சோதனை நடத்தி வருகின்றனா்.
இதேபோல,கரூரில் மாவட்ட வழங்கல் அலுவலா் சிவக்குமாா் தலைமையிலான பறக்கும் படையினா் சனிக்கிழமை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் சோதனை நடத்தியபோது, வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை உணவு தயாரிக்க பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 5 எரிவாயு உருளைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

