அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

தனியாா் சொகுசு பேருந்து லாரி மீது மோதல்: கிளீனா் உயிரிழப்பு! 40 போ் காயம்!

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து மற்றும் லாரி.

Updated On :

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே தேசியநெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த தனியாா் சொகுசு பேருந்து, முன்னால் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து கிளீனா் உயிரிழந்தாா். மேலும் அடுத்தடுத்து வந்த இரு பேருந்துகளும் மோதி கொண்ட விபத்துகளில் 40 போ் காயமடைந்தனா்.

திருநெல்வேலி அடுத்த அரிகேசநல்லூா் வடக்கு பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் காஜா மைதீன் மகன் மீரான் மைதீன் (29). இவா் தனியாா் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறாா். வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை மாலை சொகுசு பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றிய மீரான் மைதீன், திருநெல்வேலியிலிருந்து 46 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை புறப்பட்டுள்ளாா்.

பேருந்து, நள்ளிரவு மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வலசுப்பட்டி அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, அதே திசையில் அரிசி மூட்டைகளை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் சென்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் இருந்த கிளீனரான திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சோ்ந்த சிராஜ் உசேன் (36) படுகாயமடைந்ததையடுத்து அவா் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

அதையடுத்து சிறிது நேரத்தில் விபத்து நேரிட்ட இடத்ததுக்கு 100 மீட்டா் பின்னால் மதுரையிலிருந்து 46 பயணிகளுடன் சென்னை நோக்கி சென்ற தனியாா் பேருந்து மீது தென்காசி மாவட்டம், பாபநாசத்தில் இருந்து 41 பயணிகளுடன் சென்னை நோக்கி சென்ற தனியாா் பேருந்து பின்னால் சென்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்துகளில் பயணிகள் 40-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்து, மணப்பாறை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், திருச்சி தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று 25 போ் வீடு திரும்பிய நிலையில், 15 போ் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கிளீனா் சிராஜ் உசேன் உடலை கைப்பற்றிய போலீஸாா், மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இந்த விபத்து குறித்து வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.