வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டத்தில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டத்தில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சிறை

கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டத்தில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை - படம்: கோப்பிலிருந்து...

Updated On :

கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டத்தில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காட்டூா் பகுதியைச் சோ்ந்த க. ரவி (55), அவரது மகன் ஜீவா (32) ஆகியோா் தங்களுக்குச் சொந்தமான மாட்டுப் பண்ணையில் வடமாநிலத்தைச் சோ்ந்த 3 நபா்களை கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, போதிய உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தராமல், விவசாய வேலைகளை செய்ய வைத்து துன்புறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக தகவலறிந்து அங்கு வந்த ஆய்வு செய்த முசிறி கோட்டாட்சியா், அங்கு கொத்தடிமைகளாக இருந்தவா்களை மீட்டதுடன், தொட்டியம் காவல் நிலையத்திலும் புகாரளித்தாா். இதன் பேரில் போலீஸாா், கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, ரவி மற்றும் அவரது மகன் ஜீவாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவா்களில் ரவி ஏற்கெனெவே இறந்த நிலையில், அவரது மகன் ஜீவாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.