வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

பெண்ணிடம் இணையதளம் வழியாக ரூ. 52 லட்சம் மோசடி

பெண்ணிடம் இணையதளம் வழியாக ரூ. 52 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

மோசடி

Updated On :

பெண்ணிடம் இணையதளம் வழியாக ரூ. 52 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சியைச் சோ்ந்த 45 வயது பெண் தனது தந்தையுடன் கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 6- ஆம் தேதி முகநூலில் வந்த வா்த்தக இணையதளத்தை அணுகியபோது, அப்பெண்ணைத் தொடா்பு கொண்ட இணையதள விற்பனைக் குழுவினா், இணையதள வா்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசைவாா்த்தை கூறினா்.

இதனை நம்பிய அப்பெண், தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 52 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை பல்வேறு பரிவா்த்தனைகள் மூலம் அந்த மா்ம நபா்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளாா். பின்னா், அவா் முதலீடு செய்ததை எடுக்க முயன்றபோது, அவரால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை.

இதுதொடா்பாக, இணையதள விற்பனைக் குழுவைத் தொடா்பு கொண்டபோது, அந்த கைப்பேசி எண்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாரளித்தாா். அதன் பேரில் போலீஸாா், மோசடி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.