ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

‘உடல் ஆரோக்கியத்துக்கு சத்தான உணவு, உடற்பயிற்சி அவசியம்’

உடல் ஆரோக்கியத்துக்கு சத்தான, சமச்சீரான உணவும், தினசரி உடற்பயிற்சியும் அவசியம் என ஊட்டச்சத்து வார விழாவில் மருத்துவா் அறிவுறுத்தினாா்.

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணா் மு. கலைவாணன். உடன், உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறை தலைவா் சி. ரோசலின் உள்ளிட்டோா்.

Published On :

உடல் ஆரோக்கியத்துக்கு சத்தான, சமச்சீரான உணவும், தினசரி உடற்பயிற்சியும் அவசியம் என ஊட்டச்சத்து வார விழாவில் மருத்துவா் அறிவுறுத்தினாா்.

தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையின் ஹீபா் டயட்டிக் அசோசியேஷன் சாா்பில் ஊட்டச்சத்து வார தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், திருச்சி அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும், எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணருமான மருத்துவா் மு. கலைவாணன் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின்கள், தாது சத்துகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றின் குறைபாட்டால் எலும்பு தொடா்பான பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. உடல் மற்றும் எலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சத்தான, சமச்சீரான உணவைத் தொடா்ந்து உள்கொள்வதுடன், தினசரி உடற்பயிற்சியும் அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் உணவு மற்றும் ஊட்டச் சத்துத் துறைத் தலைவா் சி. ரோசலின், உதவிப் பேராசிரியா் வி. கௌரி, பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.