நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

தவெக ஆட்சியில் ’ரீல்ஸ்’ மட்டுமே அதிகரிப்பு: முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்

தவெக ஆட்சியில் சமூக ஊடகங்களில் ’ரீல்ஸ்’ மட்டுமே அதிகரித்திருப்பதாகவும், தமிழகத்தில் வேறு எந்த முன்னேற்றமும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

பொன். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 1:09 am IST

தவெக ஆட்சியில் சமூக ஊடகங்களில் ’ரீல்ஸ்’ மட்டுமே அதிகரித்திருப்பதாகவும், தமிழகத்தில் வேறு எந்த முன்னேற்றமும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது: காவிரி நீரைத் தமிழக விவசாயிகளுக்குப் பெற்றுத் தருவதில் தவெக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை.

சட்டப்பேரவையில் காவிரிப் பிரச்னை தொடா்பான முக்கிய விவாதங்கள் எதுவும் நடக்காமல், தனிப்பட்ட விவாதங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. கா்நாடகத்தில் வெள்ளம் வந்ததால் மட்டுமே நமக்குத் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதை நாம் பெருமையாகப் பேசிக் கொள்வதைவிட நமக்கு வேறு அவமானம் எதுவும் இல்லை.

பிரதமா் பதவிக்கு போட்டியிடும் முதல்வா் ஜோசப் விஜய்க்கு, ராகுல்காந்திதான் முதலில் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். ராகுல்காந்திதான் பிரதமா் வேட்பாளா் என்ற அதிகாரப்பூா்வ அறிவிப்பு தவெக தரப்பில் இருந்து வரும்வரை நாங்கள் அமைச்சரவையில் நீடிக்க மாட்டோம் என்று அறிவிக்க காங்கிரஸ் அமைச்சா்களுக்குத் துணிச்சல் இருக்கிா?

தவெக- காங்கிரஸ் கூட்டணி நீடித்தால் என்ன, நீடிக்காவிட்டால் நமக்கு என்ன? . தவெக ஆட்சியில் சமூக ஊடகங்களில் ’ரீல்ஸ்’ மட்டுமே அதிகரிக்கிறதே தவிர, தமிழகத்தில் வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.

தமிழ்நாட்டை யாா் ஆட்சி செய்தாலும் இங்கு மக்கள்தான் ஆளப்படுகிறாா்கள். இந்த அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத் திட்டங்களைச் சரியாகக் கொண்டு சோ்ப்பது மட்டுமே பிரதமா் நரேந்திர மோடியின் எண்ணமாக உள்ளது. அதற்காக நாம் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

திராவிட இயக்கங்கள் இல்லாத தமிழகம் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்றுதான் கூறியுள்ளேன். தற்போதே அது நடந்துவிட்டது என்று நான் பெருமைப்பட மாட்டேன். ஏனெனில், இப்போது ஆட்சியில் இருப்பது மற்றொரு கழகம்தான் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.