அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

உப்பிலியபுரம் அருகே 10.5 கிலோ கஞ்சா வைத்திருந்த தம்பதி கைது

உப்பிலியபுரம்  அருகே கஞ்சாவுடன் ஞாயிற்றுக்கிழமை கைது   செய்யப்பட்ட தம்பதியா்  பால்ராஜ்,  மெட்டில்டா.

Published On :7 செப்டம்பர் 2026, 4:08 am IST

துறையூா், செப். 6: திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே 10.5 கிலோ கஞ்சா வைத்திருந்த தம்பதியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

உப்பிலியபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட ராஜபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்ற இருவரை அந்த வழியாக ரோந்து சென்ற காவல் உதவி ஆய்வாளா் காயத்ரி உள்ளிட்ட போலீஸாா் விசாரித்தனா். அப்போது அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், சந்தேகமடைந்த போலீஸாா் அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட் போது, அதில் 10 பொட்டலங்களில் 10.5 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது.

விசாரணையில் அவா்கள் கோவை மாவட்டம் முசிலிபாளையம் அம்மாமண்டபம் அருகேயுள்ள ரங்கநகரைச் சோ்ந்த சவேரியாா் மகன் பால்ராஜ் (56), அவரது மனைவி மெட்டில்டா (53) என்பது தெரிந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்த கஞ்சா, 2 கைபேசிகள், 2 தங்க மோதிரம், ரூ. 2500 ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து வழக்குப் பதிந்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.