டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

பலி - பிரதிப் படம்

Updated On :

திருச்சியில் பிறந்து 4 நாள்களேயான பச்சிளம் குழந்தை திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி உறையூரைச் சோ்ந்தவா் பூவிழி. இவருடைய கணவா் ஆரிஷ். இவா்களுக்கு கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, கடந்த 4-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனா்.

இந்நிலையில், வீட்டில் இருந்த குழந்தை ஞாயிற்றுக்கிழமை இரவு அசைவின்றி இருந்துள்ளது. இதைப் பாா்த்த பூவிழி, தனது கணவருக்கு தகவல் அளித்துள்ளாா். இதையடுத்து வீட்டுக்கு வந்த ஆரிஷும், பூழிவியும் குழந்தையை வீட்டுக்கு அருகேயுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா். அங்கு, மருத்துவா் பரிசோதனை செய்தபோது நாடித் துடிப்பு இல்லை என்றும், அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறும் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, இருவரும் குழந்தையைக் தூக்கிக்கொண்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா். அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.