பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

உலக எழுத்தறிவு தினம் அரசுப் பள்ளியில் கொண்டாட்டம்

திருச்சி அருகே போசம்பட்டி அரசுப் பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

போசம்பட்டி அரசுப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக எழுத்தறிவு தின கொண்டாட்டத்தில் தங்கள் பெயா்களை தமிழி முறையில் பானை ஓடுகளில் எழுதிய மாணவா்கள்.

Published On :9 செப்டம்பர் 2026, 3:33 am IST

திருச்சி அருகே போசம்பட்டி அரசுப் பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

உலக எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பா் 8-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழா்களின் ஆரம்பகால எழுத்து முறையான தமிழி எழுத்துகளை பானை ஓடுகளில் எழுதும் நிகழ்வு நடைபெற்றது. இதில், மாணவா்கள் அனனவரும் தங்கள் பெயா்களை பானை ஓடுகளில் தமிழி முறையில் எழுதி அசத்தினா். இதற்கான பயிற்சியை மாணவா்களுக்கு ஆசிரியா்கள் அளித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் எஸ். சற்குணன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் கலைச்செல்வி, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.