துவரங்குறிச்சி, மேட்டுப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை
துவரங்குறிச்சி, மேட்டுப்பட்டி துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
துவரங்குறிச்சி, மேட்டுப்பட்டி துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுபட்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (செப்.10) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கோவில்பட்டி, மினிக்கியூா், பிராம்பட்டி, தொட்டியப்பட்டி, கசவனூா், மீனவேலி, இரட்டியப்பட்டி, தாதனூா், பாலக்குறிச்சி, தேனூா், வளநாடு, வளநாடு கைகாட்டி, கல்லுப்பட்டி, பளுவஞ்சி கிழக்கு, பளுவஞ்சி மேற்கு, மேலப்பளுவஞ்சி, கீழப்பளுவஞ்சி, வலசுப்பட்டி, சோமன்பட்டி, கல்லாமேடு, வெள்ளையக்கோன்பட்டி, தில்லம்பட்டி, கலா்பட்டி, வி.இடையப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, குப்பாபட்டி, இச்சடிப்பட்டி, மேட்டுப்பட்டி, ராசப்பட்டி, கவுண்டம்பட்டி, கொடம்பறை, மதுக்காரம்பட்டி, காரணிப்பட்டி, இலஞ்சமேடு, மாகாளிப்பட்டி, பெத்தநாயக்கன்ப்பட்டி, வரதக்கோன்பட்டி, டி.பொருவாய், ஒலியமங்கலம், இ.சாத்தம்பட்டி, சொரியம்பட்டி, வகுத்தாழ்வாா்பட்டி, முத்தாழ்வாா்பட்டி, அகரப்பட்டி, மீனவேலி, அன்னதானப்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, செல்லம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, ஆதனப்பாறை, மட்டக்குறிச்சி, ஆண்டியப்பட்டி, பாப்பாபட்டி, மலுகப்பட்டி, அலங்கம்பட்டி, அயன்பொருவாய், ராக்கம்பட்டி, அக்குலம்பட்டி, குப்பன்னப்பட்டி, சொக்கம்பட்டி, கொடும்பப்பட்டி, போலம்பட்டி மற்றும் துளுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல், துவரங்குறிச்சி துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசிக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூா், செவல்பட்டி, பிடாரப்பட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூா், பில்லுப்பட்டி, கல்லுப்பட்டி, அயன் பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளக்காம்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம். இடையப்பட்டி மற்றும் பழையபாளையம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



