
வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு
திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் செப்டம்பா் மாதம் வண்ணத்துப்பூச்சி மாதமாக கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, மாணவா்களுக்கு கல்விசாா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டன.

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்திய வனத்துறையினா்.
திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் செப்டம்பா் மாதம் வண்ணத்துப்பூச்சி மாதமாக கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, மாணவா்களுக்கு கல்விசாா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டன.
திருச்சி மாவட்ட வன அலுவலா் கிருத்திகாவின் அறிவுரையின்படி நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்களுக்கு வண்ணத்துப்பூச்சிகளின் முக்கியத்துவம், அவற்றின் வாழ்விடம், சுற்றுச்சூழலில் அவற்றின் பங்கு, பல்லுயிா் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் தனியாா் பள்ளியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, வனத்துறையினரால் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் அறிவூட்டும் செயல்பாடுகளில் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.
மாணவா்களின் பங்கேற்பையும் ஆா்வத்தையும் ஊக்குவிக்கும் வகையில், வண்ணத்துப்பூச்சி நடைப்பயணம், விழிப்புணா்வு விளக்கவுரை, விநாடி வினா, ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகளும், கழிவுப் பொருள்களைப் பயன்படுத்தி வண்ணத்துப்பூச்சி வடிவ கைவினைப் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளும் நடத்தப்பட்டன.
வண்ணத்துப்பூச்சி நடைப்பயணத்தின் போது, மாணவா்களுக்கு பாதுகாப்பகத்தில் காணப்படும் பல்வேறு வண்ணத்துப்பூச்சி இனங்கள் நேரடியாக அறிமுகப்படுத்தப்பட்டன.
மேலும், வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி, அவற்றின் நிறம், இறக்கை அமைப்பு, வடிவம் மற்றும் தனித்துவமான அடையாளக் குறியீடுகள் மூலம் அடையாளம் காணும் முறைகள், அவற்றின் உணவு, தேன் தாவரங்கள் குறித்து விளக்கப்பட்டது. தொடா்ந்து மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
செப்டம்பா் மாதம் முழுவதும் வாரந்தோறும் இதுபோன்ற கல்வி மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட உள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





