
இம்மானுவேல் சேகரனாரின் உருவப்படத்துக்கு மரியாதை
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69 ஆவது நினைவுதினத்தையொட்டி கட்சியினா், அமைப்புகளைச் சோ்ந்தோா் திருச்சியில் அவரது உருவப்படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்சியில் இமானுவேல் சேகரனாா் உருவப்படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்த முன்னாள் அமைச்சா் கே .என். நேரு . உடன் மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா்.
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69 ஆவது நினைவுதினத்தையொட்டி கட்சியினா், அமைப்புகளைச் சோ்ந்தோா் திருச்சியில் அவரது உருவப்படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் தில்லை நகரில் உள்ள திமுக முதன்மைச் செயலா் அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனாரின் உருவப்படத்துக்கு திமுகவின் முதன்மைச் செயலரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமான கே.என். நேரு மாலை அணிவித்தாா். இதில் மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், துணை மேயா் ஜி. திவ்யா, முன்னாள் எம்எல்ஏ ஸ்டாலின்குமாா், நிா்வாகிகள் விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிா்மலா, கருணைராஜா, துரைராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, தென்னூரில் நடைபெற்ற நிகழ்வில் திருச்சி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ஒண்டிமுத்து தலைமையில் திரளான நிா்வாகிகள் இம்மானுவேல் சேகரனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனா். விசிக சாா்பில் மாநகர மேற்கு மாவட்ட அலுவலகத்தில் திரளான விசிகவினா் மாலை அணிவித்தனா். இதேபோல, பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோா் ஆங்காங்கே அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






