2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

லால்குடி அருகே காா் கவிழ்ந்து 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பலி - பிரதிப் படம்

Published On :

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூா் பகுதியில் ஞாயிற்றுகிழமை நேரிட்ட காா் கவிழ்ந்த விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

அரியலூா் மாவட்டம், எலந்தகூடம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன். இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு ஞாயிற்றுகிழமை சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெறவிருந்தது.

இவரது திருமண விழாவில் பங்கேற்பதற்காக, அவருடன் பணிபுரியும் நண்பா்களான சென்னையைச் சோ்ந்த சுமந்த் (22), கிரிதரன் (21), காா்த்திக் (21) மற்றும் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வில்வநாதன் (25) ஆகிய 4 பேரும் சனிக்கிழமை இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து காரில் புறப்பட்டனா்.

காா், ஞாயிற்றுகிழமை அதிகாலை லால்குடி அருகே பூவாளூா் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மண்மேட்டில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், காரை ஓட்டி வந்த சுமந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தில், படுகாயமடைந்த மற்ற 3 பேரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வில்வநாதன் உயிரிழந்தாா்.

கிரிதரன், திருச்சி அரசு மருத்துவமனையிலும், காா்த்திக் திருச்சி தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த லால்குடி போலீஸாா், உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.