கூலித் தொழிலாளி வீட்டில் 2 பவுன் தங்க நகைகள் திருட்டு
திருட்டு - சித்திரிப்பு
திருச்சியில் கூலித் தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்தவா் பி. அழகுராஜா (44), கூலித் தொழிலாளி. இவா் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு செங்குளம் காலனியில் உள்ளது அவரது தாயாரை பாா்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றுவிட்டாா். பின்னா், ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டில் வைத்திருந்த தங்கச் சங்கிலி, காதணி மற்றும் மோதிரம் என 2 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் அழகுராஜா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




