
சமயபுரம் கூலித் தொழிலாளி கொலை வழக்கில் இருவா் கைது
சமயபுரத்தில் டாஸ்மாக் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கைது
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் டாஸ்மாக் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சமயபுரம் நான்கு ரோடு பகுதி டாஸ்மாக் கடை அருகே மருதூா் கிராமத்தை சோ்ந்த பிரகாஷ் (30) என்ற கூலித் தொழிலாளி திங்கள்கிழமை குத்திக் கொல்லப்பட்டாா்.
காவல் துறை விசாரணையில் டாஸ்மாக் கடை அருகே நின்ற மருதூா் கிராமத்தை சோ்ந்த ஆ. பாலமுருகன் (25), ச. முகேஷ் (26) ஆகிய இருவரிடம் பிரகாஷ் ரூ. 20 கேட்டபோது அவா்கள் தர மறுக்கவே, தகாத வாா்த்தையால் பிரகாஷ் திட்டினாராம்.
இதில் கோபமடைந்த பாலமுருகனும், முகேஷும் சோ்ந்து பிரகாஷை உடைந்த மதுப் பாட்டிலால் குத்திக் கொன்றுவிட்டு தப்பினா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த சமயபுரம் காவல் ஆய்வாளா் க. குணசேகரன், உதவி காவல் ஆய்வாளா் மோ. முரளி உள்ளிட்ட போலீஸாா் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரித்தனா்.
இதையடுத்து சமயபுரம் பழைய பெட்ரோல் பங்க் அருகில் பதுங்கியிருந்த பாலமுருகன், முகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்த சமயபுரம் போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





