நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

மாணவிக்கு பாலியல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

தஞ்சாவூா் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூலித் தொழிலாளியைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :3 செப்டம்பர் 2026, 1:35 am IST

தஞ்சாவூா் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூலித் தொழிலாளியைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே வல்லம் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 38 வயதான கூலித் தொழிலாளி, தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகளான 11-ஆம் வகுப்பு படித்த மாணவிக்கு 2022-ஆம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை கொடுத்து வந்தாா்.

இதனால், மாணவி மனஉளைச்சலுக்கு ஆளாகிய தகவல் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தெரிய வந்தது. இது குறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் புகாா் செய்தாா்.

இதன்பேரில், காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, தொழிலாளியை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.