பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது
தஞ்சாவூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது
தஞ்சாவூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே வல்லம் பகுதி கிராமத்தைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறாா். இந்நிலையில், இவரது வீட்டுக்குள் செப். 9-ஆம் தேதி நள்ளிரவு அதே கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன் அத்துமீறி புகுந்து தூங்கிக் கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். மாணவி சப்தம் போட்டதால், சிறுவன் தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. இதன் பேரில் காவல் ஆய்வாளா் கனிமொழி உள்ளிட்டோா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிறுவனை வெள்ளிக்கிழமை கைது செய்து, தஞ்சாவூா் அரசினா் குழந்தைகள் இல்லத்தில் சோ்த்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





