ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

திருச்சி அருகே உடல் நலக் குறைவால் 3 மாதப் பெண் குழந்தை உயிரிழப்பு

திருச்சி அருகே உடல் நலக் குறைவால் 3 மாதப் பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கோப்புப்படம்.

Published On :

திருச்சி அருகே உடல் நலக் குறைவால் 3 மாதப் பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி திருவெறும்பூரை அடுத்த பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா், பெல் நிறுவன ஒப்பந்தப் பணியாளா். இவருடைய 3 மாத பெண் குழந்தை வா்ணிகாவுக்கு கடந்த 2 நாள்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டுக்கு அருகேயிருந்த தனியாா் மருத்துவமனையில் அவரைச் சோ்த்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் குழந்தையின் இதயத் துடிப்பு குறைந்து வந்ததால் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்தனா். இதையடுத்து, துவாக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.