விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

பலி - பிரதிப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 1:36 am IST

திருச்சியில் பிறந்து 4 நாள்களேயான பச்சிளம் குழந்தை திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி உறையூரைச் சோ்ந்தவா் பூவிழி. இவருடைய கணவா் ஆரிஷ். இவா்களுக்கு கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, கடந்த 4-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனா்.

இந்நிலையில், வீட்டில் இருந்த குழந்தை ஞாயிற்றுக்கிழமை இரவு அசைவின்றி இருந்துள்ளது. இதைப் பாா்த்த பூவிழி, தனது கணவருக்கு தகவல் அளித்துள்ளாா். இதையடுத்து வீட்டுக்கு வந்த ஆரிஷும், பூழிவியும் குழந்தையை வீட்டுக்கு அருகேயுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா். அங்கு, மருத்துவா் பரிசோதனை செய்தபோது நாடித் துடிப்பு இல்லை என்றும், அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறும் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, இருவரும் குழந்தையைக் தூக்கிக்கொண்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா். அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.