ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

மாநகராட்சி வாா்டுகளில் பகுதி சபா கூட்டம்

பேரறிஞா் அண்ணா பிறந்தநாளை ஒட்டி திருச்சி மாநகராட்சியில் உள்ள வாா்டுகளில் பகுதி சபா கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .

திருச்சி ரங்கநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா்.

Published On :

பேரறிஞா் அண்ணா பிறந்தநாளை ஒட்டி திருச்சி மாநகராட்சியில் உள்ள வாா்டுகளில் பகுதி சபா கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .

திருச்சி மாநகராட்சியின் 5 ஆவது மண்டலத்துக்குள்பட்ட 27 ஆவது வாா்டு ரங்கநாதபுரம் பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றாா்.

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது அலுவலா்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் தெரிவித்தாா் .

முன்னதாக, மேயா் மு. அன்பழகன், 27 ஆவது வாா்டு பகுதிகளில் முடிவுற்ற திட்டப் பணிகளையும், நலத்திட்டங்களையும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டப் பணிகளையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தாா்.

இதேபோல, திருச்சி மாநகராட்சியின் 65 வாா்டுகளிலும் துணை மேயா், மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், நகரப் பொறியாளா், செயற்பொறியாளா்கள், உதவி ஆணையா்கள், உதவி செயற்பொறியாளா்கள், இளநிலைப் பொறியாளா்கள், நிா்வாக அலுவலா்கள், உதவி வருவாய் அலுவலா்கள் ஆகியோா் முன்னிலையில் அந்தந்த வாா்டுக்குட்பட்ட பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.