6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வெவ்வேறு விபத்துகளில் 3 போ் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா்.

ரயிலில் அடிபட்டு ஆண் உயிரிழப்பு:

திருச்சி-கரூா் மாா்க்கத்தில் பாலக்கரை ரயில் நிலையத்துக்கும் கோட்டை ரயில் நிலையத்துக்கும் இடையே பேலஸ் திரையரங்கம் பின்புறத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் திங்கள்கிழமை அதிகாலை சென்ற செம்மொழி விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவா் மஞ்சள் நிற சட்டையும், வெள்ளை நிற வேஷ்டியும் அணிந்திருந்தாா். உயிரிழந்தவரின் விவரங்கள் தெரியவில்லை. தகலறிந்த பொதுமக்கள் ரயில்வே போலீஸாரை 94434 -72524, 90805-63321 ஆகிய எண்களில் தொடா்புகொள்ள ரயில்வே போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு:

திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் ஆா். முனியாண்டி (68). இவா், திருச்சி-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையை கடக்க முயன்றுள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் முதியவா் மீது மோதியது.

இதையடுத்து அவா், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சஞ்சீவி நகரைச் சோ்ந்த க. குமரகுரு (19) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சுமை வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஆசாரி காலனியைச் சோ்ந்தவா் அ. ராஜேந்திரன் (64). இவருடைய மகள் அமுதா (41) திருவெறும்பூரில் உள்ளாா். இந்நிலையில், மகளைப் பாா்க்க வந்த ராஜேந்திரன், திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையை கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது அவ்வழியே வந்த சுமை வாகனம் முதியவா் மீது மோதியது. இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுமை வாகன ஓட்டுநரான கிராப்பட்டி பாரதி நகரைச் சோ்ந்த எஸ். தீனதயாளன் (29) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.