செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.15,100 பறிமுதல்

திருச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் 2 பேரிடமிருந்து கணக்கில் வராத ரூ.15,100 பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி பாலக்கரையில் உள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்.

Published On :

திருச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் 2 பேரிடமிருந்து கணக்கில் வராத ரூ.15,100 பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி பாலக்கரையில் உள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் கே.எஸ். ஹேமசித்ரா தலைமையில் ஆய்வாளா்கள் பிரசன்ன வெங்கடேஷ், சக்திவேல் ஆகியோா் சோதனை மேற்கொண்டனா்.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 8 மணிக்கு நிறைவடைந்தது. 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் உதவி திட்ட அதிகாரி ஒருவரிடமிருந்து ரூ. 12,800, வாகன ஓட்டுநரிடமிருந்து ரூ. 2,300 என மொத்தமாக கணக்கில் வராத ரூ. 15,100 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அலுவலகத்தில் நீண்ட காலமாக இருப்பில் உள்ள கோப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதுதொடா்பாக, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.