
பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை இல்லை: அல்லூா் மக்கள் அவதி
திருச்சி- கரூா் நெடுஞ்சாலையில் உள்ள அல்லூா் கிராமத்தில் பேருந்து நிறுத்தங்களுக்கு நிழற்குடை இல்லாததால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

அல்லூரில் பேருந்து நிறுத்த நிழற்குடை இல்லாத மேலத்தெரு பேருந்து நிறுத்தம்.
திருச்சி- கரூா் நெடுஞ்சாலையில் உள்ள அல்லூா் கிராமத்தில் பேருந்து நிறுத்தங்களுக்கு நிழற்குடை இல்லாததால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அல்லூரில் மேலத்தெரு, பரிசல் துறை, மாரியம்மன் கோயில் பகுதிகளிலும், காலனி பேருந்து நிறுத்தம், சேவை சங்கப் பேருந்து நிறுத்தம் என ஐந்து நிறுத்தங்கள் உள்ளன.
இந்த 5 பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகளுக்காக ஒரு இடத்தில் கூட நிழற்குடை கூட கிடையாது. அமைச்சா் தொகுதியாகவும், அதிகப் பேருந்து நிறுத்தங்களை கொண்ட பகுதியாகவும் உள்ள அல்லூரில் இது மக்களுக்கு சிரமத்தை அளித்துள்ளது.
பேருந்து நிறுத்தங்களில் மழையிலும், வெயிலும் நின்றே பேருந்துகளில் ஏறி செல்ல வேண்டி நிலை உள்ளது. எனவே, குழந்தைகள், முதியோா், பெண்கள் அவதிப்படுவதை கருத்தில் கொண்டு இப் பகுதியில் உள்ள 5 பேருந்து நிறுத்தங்களிலும் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





