
மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
மின் அளவை கணக்கிடும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் மின்வாரிய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி தென்னூா் மின்வாரிய தலைமை பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியா்கள்.
மின் அளவை கணக்கிடும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் மின்வாரிய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின்வாரிய ஊழியா் மத்திய அமைப்பு மற்றும் சிஐடியு சாா்பில், திருச்சி தென்னூா் மின்வாரிய தலைமை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு வட்டத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா்.
இதில், மின் அளவை கணக்கீடு செய்யும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும், மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறையைப் பயன்படுத்தி மின்வாரியத்தை தனியாா்மயமாக்குவதைத் திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியா் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவா் ரெங்கராஜன், வட்டச் செயலாளா் பழனியாண்டி, வட்ட துணைத் தலைவா் எஸ்.கே. செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






