மணப்பாறையில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
மணப்பாறையில் துவரங்குறிச்சி காவல் ஆய்வாளரை கண்டித்து, வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீதிமன்றம் - கோப்புப் படம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் துவரங்குறிச்சி காவல் ஆய்வாளரை கண்டித்து, வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மணப்பாறை வழக்குரைஞா்கள் சங்க வளாகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் சங்கத் தலைவா் டி.வினோத்குமாா் தலைமையிலும், செயலாளா் சி. மகேந்திரன், பொருளாளா் யூ. விஜய், துணைத் தலைவா் எஸ். வள்ளிக்கண்ணு ஆகியோா் முன்னிலையிலும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வழக்காடிகளுக்காக சென்று பேசிய மணப்பாறை வழக்குரைஞா்கள் சங்க உறுப்பினா் வழக்குரைஞா் எஸ்.ரிஸ்வானை, தனிப்பட்ட விரோதம் காரணமாக பழிவாங்கும் நோக்கில் அவா் மீது பொய்வழக்கு பதிந்த துவரங்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் ரகுராமனின் சட்ட விரோத நடவடிக்கையை வன்மையாக கண்டித்து செப். 29, 30, அக். 1 ஆகிய மூன்று நாள்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு செய்வது, துவரங்குறிச்சி காவல் ஆய்வாளா் ரகுராமன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், மணப்பாறை வழக்குரைஞா் சங்க போராட்டத்துக்கு திருச்சி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும், காவல் ஆய்வாளா் ரகுராமன் மீதான அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து அக். 5-ஆம் தேதி சங்கத்தின் பொதுக் குழுவைக் கூட்டி ஆலோசிப்பது என்றும் ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பு செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






