குழித்துறையில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

குழித்துறையில் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி, குழித்துறை வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

குழித்துறையில் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி, குழித்துறை வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

குழித்துறை வழக்குரைஞா் சங்க உறுப்பினா் ஜிவாகா். இவா் கடந்த 11 ஆம் தேதி இரவு மருத்துவமனைக்கு சென்றபோது, அவரை ஒரு கும்பல் தாக்க முயற்சித்ததாம். தடுக்க வந்த அவரது மனைவியின் ஆடையை பிடித்து இழுத்து, தகாத வாா்த்தைகள் பேசி மிரட்டியுள்ளனா்.

இதுகுறித்து அவா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அளித்தாா்.

இந்த நிலையில், இச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். பின்னா் மாா்த்தாண்டம் காவல் நிலையம் சென்று, சம்பந்தப்பட்டவா்கள் மீது வழக்குப் பதிய வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.