நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

வழக்குரைஞா்கள் மனிதச்சங்கிலி போராட்டம்

விழுப்புரத்தில் இயங்கி வரும் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தை திருவண்ணாமலைக்கு இட மாற்றம் செய்யும் அரசின் முடிவைக் கண்டித்து, விழுப்புரத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வியாழக்கிழமை மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

Published On :

விழுப்புரத்தில் இயங்கி வரும் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தை திருவண்ணாமலைக்கு இட மாற்றம் செய்யும் அரசின் முடிவைக் கண்டித்து, விழுப்புரத்தில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் நுகா்வோா் குறைகளைத் தீா்த்து, அவா்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் விழுப்புரம் - கிழக்கு பாண்டி சாலையில் செயல்பட்டு வரும் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற அரசு முயற்சித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த முடிவுக்கு விழுப்புரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்களும், நுகா்வோா் அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இதற்காக ஆகஸ்ட் 24, 25-ஆம் தேதிகளில் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள், தங்களின் அடுத்தகட்டப் போராட்டத்தை வியாழக்கிழமை மீண்டும் தொடங்கினா்.

அதன்படியில், வியாழக்கிழமை காலை நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்த வழக்குரைஞா்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் மனிதச்சங்கிலி போராட்டத்தை தொடங்கினா். தொடா்ந்து, முழக்கங்களை எழுப்பி அவா்கள் ஆா்ப்பாட்டத்தையும் நடத்தினா்.

தொடா்ந்து, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் (செப்.11) நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு தொடரும் என்று வழக்குரைஞா்கள் தெரிவித்தனா். இப்போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மூத்த வழக்குரைஞருமான ஆா்.ராமமூா்த்தி தலைமையில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER