அரக்கோணத்தில் தயாராகும் ரயில்வே பாலம்
அரக்கோணம், ஜூலை 16: இந்தியாவின் மிக உயர்ந்த ஆற்றுப்பாலங்களில் ஒன்றானதும், சிறிய கப்பல்கள் போக வழிவிடும் பாலங்களில் ஒன்றானதுமான கேரள மாநிலம் நேத்ராவதி ஆற்று ரயில்வே பாலம் அரக்கோணம் ரயில்


அரக்கோணம், ஜூலை 16: இந்தியாவின் மிக உயர்ந்த ஆற்றுப்பாலங்களில் ஒன்றானதும், சிறிய கப்பல்கள் போக வழிவிடும் பாலங்களில் ஒன்றானதுமான கேரள மாநிலம் நேத்ராவதி ஆற்று ரயில்வே பாலம் அரக்கோணம் ரயில்வே பொறியியல் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ராமேஸ்வரம் கடலில் உள்ள இரட்டை திறப்பு ரயில்வே பாலம், நூறு அடி நீளமுள்ள கேரள மாநிலம் வல்லபட்டினம் ரயில்வே பாலம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தேசிய அனல் மின்கழக திட்டத்திற்காக 80 அடி நீளத்தில் தயாரான பாலம் மற்றும் நீலகிரி மலை ரயில்களுக்கான சிறப்பு ரயில் பாதைகள் ஆகியவை வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தென்னிந்திய ரயில்வேயின் ரயில்வே பொறியியல் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன.
தற்போது கேரள மாநிலம் சுரனூர்-மங்களூர் ரயில்பாதையில் உள்ளால்-கன்கனாடி ரயில் நிலையங்களுக்கு இடையே நேத்ராவதி ஆற்று ரயில்வே பாலத்தின் முக்கியமான நடுப்பகுதிகள் அரக்கோணம் தொழிற்சாலையில் தயாராகி வருகிறது.
ஒவ்வொன்றும் 45.7 மீட்டர் அளவுள்ள நான்கு கர்டர்கள் இங்கு தயாராகிறது. 182 மீட்டர் நீளத்திற்கு பொருத்தப்பட வேண்டிய இவை தனித்தனியே பிரித்து எடுத்துச் சென்று நேத்ராவதியில் கட்டுமானப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
வெறும் பாலம் மட்டுமே இல்லாமல் உள்ளே செல்லும் ரயில்கள் பாதுகாப்புடன் செல்லும் அளவு இரும்பு வளைவுகளுடன் இந்த பாலம் தயாராகிறது.
ஏற்கெனவே ஒரு இருப்புப்பாதை மட்டுமே இருந்த பாலத்திற்கு பதிலாக தற்போது இரண்டு இருப்புப்பாதை கொண்ட பாலமாக கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன.
இந்த நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் 23 கர்டர்கள் கான்கிரீட்டால் உருவாக்கப்பட்ட நிலையில் நடுப்பகுதியில் ஒவ்வொன்றும் 111 டன்கள் எடை கொண்ட நான்கு கர்டர்கள் மேலும் ஒரு சிறிய கர்டர் ஆகியவை மட்டும் இரும்பால் உருவாக்கப்படுகிறது.
இந்த பாலம் அமைக்கும் பகுதியில் சிறிய கப்பல்கள், படகுகள் செல்ல ஏதுவாக இந்த இரும்பு கர்டர்கள் அமைக்கப்படுகின்றன. ஏற்கெனவே இங்கு இருந்த பாலம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாகும். தற்போது இந்த பாலம் இந்தியாவிலேயே பிரம்மாண்டமாய் தயாரிக்கப்படுகிறது.
இந்த பாலத்தை உருவாக்கும் பணியில் 250 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் நாட்டின் சில ஆற்றுப்பாலங்களில் ரயில்கள் விபத்துக்குள்ளான நிலையில் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எதிர்காலத்திற்கேற்றவாறு இப்பாலம் உருவாக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே பொறியியல் தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...