டிக்கெட் எடுக்க அல்லல்படும் பயணிகள்!
அரக்கோணம், ஆக. 13: அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், கூடுதல் பயணச்சீட்டு விநியோக மையங்கள் அமைக்க


அரக்கோணம், ஆக. 13: அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனால், கூடுதல் பயணச்சீட்டு விநியோக மையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
அரக்கோணம் ரயில் நிலையத்தில், அன்றைய தின பயணச்சீட்டுகள் வழங்க 5 மையங்கள் உள்ளன.
இங்கு சலுகை விலை, மாதாந்திர பயணச்சீட்டு வாங்குவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துவிட்டது. தினசரி பயணச்சீட்டு வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனால், பயணச் சீட்டு மையங்களில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு 24 மணி நேரமும் காவலர் இருந்து வரிசையை ஒழுங்குபடுத்த வேண்டிய நிலை உள்ளது.
இங்கு, தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் கருவி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் தானியங்கி அட்டையைப் புதுப்பிக்க, பயணச்சீட்டு கவுண்டர்களையே நாட வேண்டிய நிலை. மேலும், தானியங்கி இயந்திரத்திலும், சென்னை மார்க்க பயணச்சீட்டுகள் மட்டுமே பெறும் நிலை உள்ளது.
தனியார் முகவர்கள் இருந்தும் பயனில்லை!
அரக்கோணம் நகரின் இரு இடங்களில் பயணச்சீட்டு வழங்க முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிலையத்திற்கு அருகில் இல்லாததால், பயணிகள் அதிகம் ரயில் நிலைய பயணச்சீட்டு மையங்களேயே நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ரயில் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, பயணச்சீட்டு பெறும் நிலை தொடர்கிறது. இக் கால தாமதத்தால், பலர் ரயில்களைத் தவறவிடுவதும் உண்டு. ரயில் புறப்படும் நேரத்துக்கு முன்பே இங்கு வந்தாலும், கூட்ட நெரிசலால் ரயில் கிளம்பும் நேரத்துக்குள் டிக்கெட் பெற முடியாத நிலை உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.
எனவே, ரயில்நிலைய முகப்பு கட்டடத்தில் கிழக்கு பக்கத்தில் மூடி வைக்கப்பட்டுள்ள இரு மையங்களையும் திறந்து, அதிலும் பயணச்சீட்டுகளை வழங்க தெற்கு ரயில்வே சென்னை கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தானியங்கி அட்டை புதுப்பிக்க தனி மையம் ஏற்படுத்த கோரிக்கை அரக்கோணம் ரயில் உபயோகிப்போர் சங்கத் தலைவர் பிரபாகரன் கூறியது:
அரக்கோணம் ரயில் நிலையத்தில் கூடுதல் பயணச்சீட்டு விநியோக மையங்களை அமைக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகனிடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். அவரும் இதை, ரயில்வே அமைச்சருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.
ரயில் நிலையத்தில் கூடுதல் மையங்கள் திறந்தால் மட்டுமே, ஏராளமான பயணிகள் பயனடைய முடியும். மேலும், மாதாந்திர பயணச்சீட்டு, சலுகை விலை பயணச்சீட்டு பெறுவோர், தானியங்கி அட்டையைப் புதுப்பிப்போருக்கென தனி மையத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...