வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வெயில் கொளுத்திய மதிய வேளையில், ஒருவர் மொபட்டில் உணவுப் பொட்டலங்களை கொண்டு சென்றார். சாலையோரத்தில் படுத்துக் கிடந்த பிச்சைக்காரருக்கு உணவுப் பொட்டலத்தை அளித்தார்.
என்ன வீட்டில் விசேஷமா? அன்னதானம் செய்கிறீர்களா? என்று கேட்டோம்.
கடந்த 4 ஆண்டுகளாக தினமும் மதியம் இவ்வாறு உணவுப் பொட்டலத்தை வழங்குவதாகச் சொன்னார். அவர் கொடுத்த பொட்டலத்தில், ஒரு பெரிய களி உருண்டையும், சாம்பார் சாதமும் இருந்தது.
சுமார் 20-க்கும் மேற்பட்ட சாலையோர பிச்சைக்காரர்களுக்கும், ஆதரவின்றி தெருவோரத்தில் வசிப்போருக்கும் உணவு வழங்கிய அவர், அடுத்து சென்ற இடம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை.
அங்கு உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் அனைவருக்கும் (அது 60 பேராக இருந்தாலும் சரி, 100-ஆக இருந்தாலும் சரி) களி உருண்டை, சாம்பார் சாதம் அடங்கிய பொட்டலத்தை வழங்கத் தொடங்கினார். கேட்டால், இதுவும் 4 ஆண்டுகளாகத் தொடர்கிறது என்றா.
அவரைப் பற்றி விசாரித்தோம்.
திருப்பத்தூரைச் சேர்ந்த அவரது பெயர் ரமேஷ் (37). திருப்பத்தூரில் உதவும் உள்ளங்கள் என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். மன நலம் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இல்லத்தின் இணைச் செயலராகவும் உள்ளார். மன நலம் பாதிக்கப்பட்ட 35 பேரை இந்த இல்லத்தில் பராமரித்து வருகிறார் என்பது தெரிந்தது.அவர் கூறியதாவது:
உதவும் உள்ளங்கள் அமைப்பு தொடங்கப்பட்டதன் நோக்கத்தின் ஒரு பகுதி இது. மன நலம் பாதிக்கப்படாத, சாலையோரத்தில் திரியும் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகம் இருக்கிறது. அவர்களை மன நலன் குன்றியோருக்கான இல்லத்தில் சேர்க்க முடியாது. அதனால், அவர்கள் இருப்பிடம் தேடிச் சென்று மதிய நேரத்தில் மட்டும் உணவுப் பொட்டலங்களை அளித்து வருகிறோம். இதற்கான பொருள்களை நன்கொடையாளர்களிடம் இருந்து பெறுகிறோம்.
தினசரி மதியம் மறுவாழ்வு இல்லத்தில் களி தயாரிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கும், சாலையோர பிச்சைக்காரர்கள், ஆதரவற்றோருக்கும் விநியோகிக்கிறோம். தினசரி 100-க்கும் மேற்பட்டோருக்கு இந்த உணவு வழங்கப்படுகிறது. மேலும், மன நலன் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இல்லத்தில் இருப்போருக்கும் இதுதான் உணவு.
இவ்வாறு சாலையில் உணவு வழங்கும்போது, மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், அவர்களை மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்துக் கொள்கிறோம். மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கச் செய்து, குணமாக்கினாலும், சிலரது உறவினர்கள் இவர்களை அழைத்துச் செல்ல மறுப்பது மட்டுமே வருத்தமளிக்கிறது என்றார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

